24 Apr 2013

சரச சிலைகள்

ஊரைச் சுத்தி ஆயிரத்தி முன்னூறு குறைகளிருக்கு அத விட்டுட்டு உப்பு சப்பில்லாம முச்சந்தியில வந்து கலாச்சார சீரழிவுக்கு கோவில் சிற்பங்களில் உள்ள சரசர சிற்பங்களும் ஒரு காரணம்னு சொல்றது படு கண்மூடித்தனம்! மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறேன் பேர்வழின்னு, இஸ்லாம் சிறந்ததுன்னு சொல்ல ஹிந்துசத்தை உதாரணத்து எடுக்கும் எடுப்பு சோறுகளும் செய்யும் செம காமடி விஷயங்கள் இவை :) எனக்கும் மூடநம்பிக்கைகளில் துளியும் உடன்பாடில்லை கோவில்களின் வழிபாட்டு முறைகளை செருப்பால அடிக்கும் நான் கோவில்களை போற்றுகிறேன்!!






கோவில்களில் இருக்கும் சரச சிலைகள் அங்கு வருவோரின் மனநிலையை மாற்றி எழுச்சியை ஏற்படுத்துகிறதாம் :) மனிதனின் துவக்கப்புள்ளி உயிர் உருவாக்களின் தாரகம் காமம்! இதை நீங்க ஏத்துக்கிட்டாலும் எத்துக்காம விட்டாலும் இதுதான் உண்மை. யோக்கிய சிகாமணியா இத அசிங்கம்ன்னு நினைச்சா நீங்களும் அந்த அசிங்கதுல இருந்துதான் வந்திருக்கிங்க என்பது நிதர்சனம். மனிதனின் அனைத்து விஷயங்களையும் சொல்லும் கோவில் அமைவுகள் தானம், தர்மம், ஒழுக்கம், மரியாதை இவற்றின் வரிசையில் காமத்தையும் சொல்லுது இவங்க யோக்கிய சிகாமணியா இருந்தா இதுமட்டும் ஏன் தப்பா தோனுதுன்னு தெரியல. அம்மணக்கட்டையான குகை ஓவியங்களை கொண்டாடும் மனிதன் கோவில் சிற்பங்களை வெறுக்கிறானாம்!!

பெரும்பாலும் சமீபத்தில் எழுப்பப்படும் கோவில்கள் எதிலும் இத்தகைய சிற்பங்கள் இருக்காது எல்லாம் பழைய பாரம்பரியமிக்க கோவில்களிலேயே இருக்கும் சிற்ப வடிவுகள். மேலும் கோவில்களில் எல்லா இடங்களிலும் இவை அவுத்து போட்டு செய்வதில்லை அன்பு, பாசம், தர்மம், ஒழுக்கம், நீதி என்று வரிசப்படுத்தப்படும் மனித விஷயங்களில் காமத்தையும் ஒரு விஷயமாக வடித்துள்ளனர் அதுவும் பெரும்பாலும் குறிப்பிட்ட ஒரு இடத்தில் மட்டும் இது தனித்தன்மையா ஒரு இடத்தில் அமைத்திருக்கும் அமைவு 'அது அதுக்கு ஒரு நேரம் காலம் இடம் பொருள் இருக்கு' என்பதற்கான சூசக செய்தியாக இருக்கலாம்! பெரும்பாலும் மேலாடையில்லாத பதுமைகளின் சிற்பம் அதிகமாக இருக்கும் இதுவொன்றும் பெரிய விஷயமில்லையே அக்காலத்தில் பெண்கள் மேலாடை அணியமாட்டார்கள் என்பது தகவல் (பெண்ணிய அடக்கு முறை மிகுதியாக இருந்த அந்த சமயத்தில் பெண் மேலாடை அணிந்திருந்தால் கொடூரர்கள் மார்பை அறுத்தெறிவார்களாம் :( இப்படியாக கேள்வி) எனவே அக்கால இயல்பின்படி செதுக்கப்பட்ட வடிவங்களே அவை.

ஊரைச் சுத்தி ஆயிரம் காரணங்கள் இருக்க இந்த சிலைகளைப் பார்த்தா எழுச்சி வருதுன்னு சொல்றது தன்னைத்தானே அசிங்கப்படுத்திக் கொள்ளும் நிலை. உயிருள்ள பொண்ணுக்கும் சிலைக்குமான வித்தியாசம் அவ்வளவுதானா! அப்படியாயின் பகுத்தறியும் அறிவு எங்கே போயிற்று..?.?. சகல விஷயங்களையும் போதிக்கும் கோவில் சிற்பங்கள் காமத்தை கொண்டது ஏன் என யோசிக்காத மரமண்டைக்கு கோவில் சிற்பம் என்ன செய்யும்..?. எல்லாம் பார்வையில்தான் உள்ளது கல்லக் கூட விடாத கொடூரனா நீ இருந்தா மண்ணு கூட மானங்கெட்டுதான் போகும். கோவில் சிலை தான் கற்பழிப்புக்கு காரணம் போல பேசுபவர்களுக்கு மேற்கத்திய ஐரோப்பிய நாடுகளில் இன்றும் கலையென நிறுவப்படும் முக்குக்கு மூணு அம்மண சிலைகள் தெரியாதோ!! (அதையெல்லாம் பெருமையா பேசிக்கும் தமிழன் தன் மூஞ்சிலேயே எச்ச துப்பிக்குவான்) கற்பழிப்பு மோசம் தான் அதுக்காக செக்ஸ் வேணாம்னு சொல்ல முடியாதுங்க. எல்லாம் பார்வையில தான் இருக்கு. மிஸ் பண்ணிடாதிங்க பாரம்பரியமிக்க கோவில்களுக்கு செல்லும்போது அவசியம் சரச சிற்பங்களை கண்டு ரசியுங்கள் தாத்தனின் மதி நுட்பத்தை கலை அறிவை கொண்டாடுங்கள்.



'ஊனக்கண்னில் பார்த்தால் யாவும் குற்றம் தான்
ஞானக்கண்னில் பார்த்தல் யாவும் சுற்றம் தான்'



#பிரீயா விடுங்க பாசு :)

1 comment:

Unknown said...

உண்மை

UA-42819084-1