21 Apr 2013

ஐபிஎல்'ஜீ.. அச்சாஜீ..

இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு, பல உள்நாட்டு கலகங்களையும், சுதந்திரமடைந்து பல ஆண்டுகளைக் கடந்து இன்னும் சிலபல பிரிவினைவாத குரல்களைக் கொண்ட நாடு போன்ற இன்னும் பல விஷயங்களை உடைத்து தவிடுபொடியாக்கி ஒரு கலர்புல்லான மாயையை ஏற்படுத்துது இந்த ஐபிஎல் என்றால் அது மிகையல்ல!! இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு விவகாரங்கள், தன்னிறைவுகள், நிர்வாகங்கள், நிதி ஒதுக்கீடு, கார்பரேட் அதிகாரங்கள் ஆளுமைகள் போன்ற இன்னும் பல விஷயங்களை எழுதும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள் இந்தியாவில் ஐபிஎல் சமாச்சாரத்தை ஒரு கேலியான நகைப்புக்குரிய வரியாகவே, எதார்த்தமாகவோ சொன்னால் கட்டுரை இன்னும் சிறப்பாகும் உதாரணத்திற்கு






இன்று (Apr 21, 2013 )டெல்லியில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட விவகாரத்தில் சோனியாகாந்தி வீடு முதற்கொண்டு முதல்வர் வீடு வரை பல முக்கிய இடங்கள் மக்களால் முற்றுகையிடப்பட்டது! எனினும் ஸ்டேடியம் நிறைந்த டெல்லி மைதானத்தில் இந்த ஐபிஎல் சீசனின் முதல் வெற்றியை பெற்றது டெல்லி!! ஒருவேளை இந்த ஐபிஎல் இல்லையேல் போராட்டம் இன்னும் தீவிரமடைந்திருக்குமோ!!?



பண்டையகால தமிழர்களைப்பற்றி அறிய கல்வெட்டுகளுக்கு சற்றும் சளைக்காமல் உதவுபவை சங்ககால இலக்கியங்கள்! அப்படித்தான் சமகால இந்தியாவை அறிய ஐபிஎல்'லும்.

No comments:

UA-42819084-1