26 Apr 2013

இஞ்சித்தின்ன கொரங்கும் இன்ஜினியரிங்கும்!

கடுப்பைக் கிளப்பும் அசைன்மேன்ட்டுகளை பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் எழுதிவிட்டு நள்ளிரவு வரை இணையத்தில் இன்ச் பை இன்சாக நகர்ந்தவாரே லேப்டாபை கட்டிப்பிடித்து தூங்கிப் போக 9 மணி கல்லூரிக்கு என் அறையில் 8.50க்கு சூரியோதயமாகும்..!.?.

அதன் பிறகு இணையக் கடன்களை எல்லாம் முடித்து ( தவறாமல் பேஸ்புக் லாகின் ). குளிக்கச் சென்றால் பச்சைத்தண்ணி என்னைப் பார்த்து பல்லைக் காட்ட.. நான் பக்கெட்டைப் பார்க்க பக்கெட் என்னைப் பார்க்க.. இந்த காதல் கதை ஐந்து நிமிடம் கழித்து ஒரு வாக்கியத்துடன் முடிவுக்கு வரும் 'வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து காட்டுவோம்'. ஒருவழியாக நனைந்து ரூமுக்கு வந்தால் கல்லூரியில் மணியடிப்பது எனக்குக் கேட்க்கும் மணி 9.


அவசர அவசரமாக 'ஆள் பாதி ஆடை பாதி' கொள்கையினை முடித்து விடுதி மெஸ்க்கு போனா டைம் ஓவர் பிரேக்பாஸ்ட் காலி..!.?. (மெஸ் பில் மட்டும் ஆயிரக்கணக்கில் வருவது வேறு கதை)

இப்போ மணி 9.15 எல்லாம் அவன் செயல்.. மெஸ்சை கடந்து வர விடுதி ரீடிங் ரூம் காட்சிப்படும்.. சட்டென ஒரு அலசல் தலையங்கள் மட்டும். இவ்வளவு கஷ்டத்திலும் இந்த தருணத்தில் 'தினமலரின்' செய்திகள் என்ன சிரிக்க வைக்கும் (செம காமெடி சார்). திடீர்னு வாட்ச்மேன் வந்து வணக்கம் சார் சாப்டிங்களா..?. என்பார் நினைவு வந்து திரும்பிப் பார்த்தால் மணி 9.30.. டக்கென எழுந்து கொஞ்சம் வேகமான நடை விடுதி முகப்பில் இருக்கும் RO system தன்னியோடு முடியும் காலை சாப்பாடு.. ( எவ்வளவு முயன்றும் ஏப்பம் மட்டும் வரவில்லை )...!.

ஒருவழியா காலேஜ் வர டிப்பார்ட்மெண்ட் என்டரன்ஸ் வாட்சில் டைம் 9.35. வகுப்புக்குச் சென்றால் அங்கே ஒருவர் அவருக்கே தெரியாததை சொல்லிக் கொடுத்துக்கொண்டிருப்பார் ( இன்ஜினியரிங் ஆசான் ). அவர் என்னைப் பார்க்க நான் அவரைப் பார்க்க 'பச்சைத்தண்ணி பக்கெட்டுனான அதே 'காதல்' ரியாக்ஷன்ஸ்...!.?.'
ஒருவழியா தலைகுனிந்தவாரே இடத்தில் போய் உக்கார்ந்தால் மணி அடிக்கும் டைம் 9.40 முதல் பிரிவேளை காலி...............!.?. (ting)..



இன்ஜினியரிங் ஆசான்களுடன் இஞ்சி தின்னக் குரங்காக கடைசி பெஞ்சில். . ... .. .
புரியாத பார்முலாவுக்கு புள்ளி வைத்து கோலம் போட்டே கழியும் இன்றைய நாள்.!.?.

No comments:

UA-42819084-1