தேடிய தமிழும் பாடிய வரியே,
பாடிய வரியில் கூடிய சுவையே,
கூடிய சுவையை சூடிய மனமே,
சூடிய மனதின் சுந்தர ரதியே!
...
சுந்தர ரதியின் சூத்திரம் விழியே,
சூத்திர விழியின் சூனிய வலியே,
சூனிய வலியில் சுருங்கிய மனமே,
சுருங்கிய மனதின் சூட்சுமம் தனியே,
சூட்சுமம் தனிலே தனி நிலவவளே.!.
தனி நிலவவளின் தாளும் பதமே,
தாளும் பதிய தாமரை தவமே!
தாமரைத் தவமும் தட்டிக் கழிக்க,
தயாளன் இவன் எட்டிப் பிடிக்க,
கட்டிப் பிடிக்க கண்கள் கடிக்க,
நெஞ்சம் வெடிக்க நெற்றித் துடிக்க,
ஆன்மா அசைய ஆண்மை அடங்க.. .
அடுத்த நாலும் விடிஞ்சிடுச்சி!?
நெசமாலுமே புடிச்சதடி வேசமேறிய மேனியடி!
நேத்தைக்கே தெரிஞ்சிருக்கலாம் இன்னைக்கும் கனவாடி..?.
- அடி இன்னைக்கும் கனவாடி..?.
No comments:
Post a Comment