3 Mar 2013

இதிகாச உள்குத்து!

இராமாயணம் ஒரு கம்ப்ரஷன் ஆப் கட்டுக்கதை என்பதிருக்கட்டும்!

கதைப்படி பார்த்தாலும் வால்மீகி ராமன செமத்தியா கலாய்ஞ்சிருக்கார் போல இதென்ன இதிகாச உள்குத்தோ!! இராமாயணம் முழுக்க முழுக்க ஒரு பிக்ஷன் பேண்டசி ஸ்டோரி என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்த கதையால் முன்மொழியப்படும் இராம அவதாரம் செம காமடி பீஸானது தான் திரைக்கதை டுவிஸ்ட் :D எப்படியெனில்

இராமனை பலவாறு ஏகபோகமாக புகழ்ந்து அறிமுகப்படுத்தும் பாங்கில் கிட்டத்தட்ட அதை ஒத்த நிலையிலேதான் இராவனைனையும் அறிமுகப்படுத்துகிறார் வால்மீகி! கதையோட்டத்தில் எல்லாத்தையும் முடித்து இந்தியா திரும்பும் ராமன் கேப்பார் பேச்சு கேட்டு மனைவியை சந்தேகித்து காட்டுக்குத் துரத்தி பின் தன் சொந்த புதல்வர்களான லவன் மற்றும் குசனால் தோற்கடிக்கப்பட்டு கடைசியாக தற்கொலை செய்து உயிரைவிடுகிறார் இராமன்! (இராமனோட வாழ்க்க தான் எவ்வளவு டிராஜிடியானது!).




இதுக்கு போரில் வீரமரணமடைந்த இராவணர் எவ்வளவோ தேவலாம்!! இராவணின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் சாத்சாத் இரண்டே இரண்டு தான் அவை 1.இராவணன் பிறர் மனைவி மீது ஆசைப்பட்டான் 2.தான் என்ற அகம்பாவம் கொண்டான் என்பவை!

சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஒருமனிதனை குற்றவாளியாக ஆக்கும் என்பது இதிகாச காலம் முதற்கொண்டு பிரபஞ்சம் அறிந்த ஏற்றுக்கொண்ட உண்மை மனித இயல்பு. அப்படித்தான் சூழ்ச்சியாக இராவணனுக்கு அமைக்கப்பட்டது அந்த சூழல்!! உக்கிரமான போர் செய்யும் இராவணன் போர்க்களத்தில் தன்னுடைய உக்கார தாண்டவத்தின் முன் யார்வந்தாலும் கண்மூடித்தனமாக வெட்டி வீழ்த்துவது பழக்கம் சுபாவம் கொண்டவன் (அதனாலேயே மூவுலகையும் வென்றவன் இராவணன்). இப்படியான ஒரு போரில் தன்னுடைய படையைச் சேர்ந்தவன் என்பதையும் உணராமல் தங்கை சூற்பனகையின் கணவனை எதிர்பாராமல் வெட்டி விடுகிறான் இராவணன்! தான் தங்கையின் கணவர் என்று கூட பார்க்காமல் கொன்றமைக்காகவும், கணவனைக் கொன்று தன்னுடைய வாழ்க்கையை சிதைத்ததற்காகவும் பழிக்குப்பழி வாங்கத் துடிக்கிறாள் சூர்பனகை. அப்போதுதான் இராவணனுக்கு ஒரு பெண்ணாலேயே சாவு என்ற சாபம் தெரியவர (இந்த சாப ச்சாப்ட்டர் ஒரு தனி கதை) இராம சகோதரர்களை வாண்டடாக சீண்டி அத்தகைய ஒரு சூழ்ச்சியான சூழலை இராவணனுக்கு பாதகமான அவனின் பெயருக்கு களங்கமான ஒரு சூழலை ஏற்படுத்தி சூழ்ச்சி வலைபின்னி பலிவாங்குகிறாள் சூர்பனகை! சூழ்நிலை ஒரு உன்னதனை கறை படிந்தவனாக்குகிறது! (ஆனால் இதே சூழ்நிலை ராமனுக்கும் அமைந்து சீதையை சந்தேகித்ததால் கதையின் முன்பகுதி மற்றும் பின்பகுதி சூழ்நிலைகள் தங்களுக்குள் ஈக்குவலி டேலி செய்துகொள்கின்றன!).


2. மற்றது இராவணன் "தான்" என்ற அகம்பாவம் கொண்டவனாம் அதை அடக்கி ஒடுக்கவும் இராமர் தேவைப்பட்டாராம்! வால்மீகி இராமாயணத்தை படிக்கும் ஒவ்வொரு பக்கத்திலும் இராமனின் "தான்" என்ற அகம்பாவம் பட்டவர்த்தமாக தெரியும்! இதை இராமனின் பராக்கிரம்மம் திறமை என்பவர்கள் இராவணனிடம் மட்டும் இவற்றை அகம்பாவம் என்பது ஏன் எனத் தெரியல! இது என்னவகையான இருட்டடிப்போ!?


ஆனாலும் இராமன் ஒரு ஹீரோ என்பதைச் சொல்ல வால்மீகி படாதபாடுபட்டிருக்கிறார் :D இமாஜின் பன்னி பார்த்தால் பவர் ஸ்டாரை வச்சி எடுத்த படம்தான் இந்த இராமாயணம்!!

No comments:

UA-42819084-1