14 Jun 2013

இந்துஸ்தானம் ஆகுமா மோடிமஸ்தானம்?

இந்திய ஊடகங்களின் 'அமோசன் காடுகளில் உள்ள அரியவகை மூலிகையாக' சித்தரிக்கப்பட்டு வருகிறார் மோடி!! அப்படி என்னதான் இருக்கிறது மோடியிடம்!? எல்லாரும் சொல்வதைப்போல மோடி குஜராத்தை வளர்த்து இந்தியாவின் மாதிரி மாநிலமாக உருவாக்கியிருக்கிறார் என்பது உண்மைதான் அதில் மாற்றுக்கருத்தில்லை அனால் இந்தியாவில் குஜராத் மட்டுமே வளரவில்லை மற்ற மாநிலங்களும் (தமிழகம் உட்பட) வளர்ந்திருக்கின்றனவே!! அவற்றில் பாஜக ஆளும் மாநிலங்களும் இருக்க மோடியை மட்டுமே போகஸ் செய்வது ஏன்.?.




ஸ்டாடிக்குகளின் படி தனிநபர் வருமானத்தில் குஜராத்திற்கு ஆறாவது இடம்! (தமிழ்நாட்டுக்கு ஐந்தாவது இடம்) இருந்தாலும் வருமானம், ஆரோக்கியம், கல்வி வசதிகளின் அடிப்படையில் இந்தியாவிலேயே 11வது இடத்தில் பின்தங்கியுள்ளது! "குஜராத்தின் முன்னேற்றத்தை GDP யிலும் GROWTH RATE டிலும் பார்த்தால் பத்தோடு பதினோராவது மாநிலமாகத்தான் தெரியும். உண்மையில் குஜராத் எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கிறது. வாழ்வதற்கு ஏற்ற இந்திய நகரங்களில் குஜராத் தான் முதலிடம். சென்னையில் இரண்டு மணிநேரம் மழை பெய்தால் நகரமே நாறிடும். இங்கு அகமதாபாத், பரோடா, சூரத்தில் கடந்த நாளு நாட்களாக அடை மழை. ஒரு சொட்டு தண்ணீரை ரோடுகளில் பார்க்க முடியாது. அடிப்படை கட்டுமானம் இங்கு சிறப்பாக உள்ளது. இங்கு அரசு ஊழியர்கள் மோடிக்கு பயந்து கொண்டு வேலை செய்கிறார்கள். இலஞ்சம் வாங்க மறுக்கிறார்கள் அல்லது மிகவும் குறைவு. (இதில் என் சொந்த அனுபவம் ரொம்ப அதிகம்.) கடந்த மூன்று வருடத்தில் மொத்தமாக இரண்டு நாட்கள் தான் இங்கு மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறேன். (அது Renewable energy யோ non-renewable energy யோ மக்களுக்கு மின்சாரம் கிடைக்கிறது. ) இங்கு குற்றங்கள் மிகக் குறைவு. நகரங்கள் மிகவும் சுத்தம். (நம்ம சென்னையை விட நூறு மடங்கு மேல்.) கடனில்லாத அரசாக இருக்கும் குஜராத், GIFT, BRTS, DSIR போன்ற project களை பார்க்கும் போது தமிழ் நாடே 10 வருடங்கள் பின் தங்கியது போல தோன்றுகிறது! குஜராத் மீனவர்களை பாகிஸ்தான் அரசு கைது செய்வதை மோடி கையாளும் விதத்தையும் கொஞ்சம் அலசிப் பாருங்கள்" என்கிறார் (ராம் குமார்) குஜராத்தில் வாழும் தமிழ் நண்பர்!!

இப்படி குஜாராத்தின் நிலவரம் ஏற்ற இறக்கங்களாக இருந்தாலும் கூட மோடியை குறை சொல்பவர்களில் எப்படி குறை சொல்பவர்களாக இருந்தாலும் ஒரு வரியில் அவரை சீர்தூக்குகிறார்கள்!! "நரேந்திரமோடிக்கு நிர்வாகத்திறமை உண்டு என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ஹாட்ரிக் அடிப்பதெல்லாம் அபாரமான சாதனைதான், மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகியுமில்லை. அதே நேரம் மோசமான ஆட்சியாளரும் இல்லை என்பதுதான் உண்மை." இப்படியாக ஒவ்வொருத்தரின் பார்வையிலும் ஒவ்வொரு வரியாக சேர்ந்து மோடிக்கான பிரம்மாண்ட ஆதரவு கட்டுரைகளாக இந்தியா முழுக்க சுற்றிவருகின்றன!! இருந்தாலும்கூட பாஜக தோற்கும் அதிலும் மோடியை பிரதம வேட்பாளராக நிறுத்தினால் நிச்சியமாக தோற்கும் என்கிறார்கள் காங்கிரஸ்காரர்களும் கோத்ரா சம்பவத்தால் மனமுடைந்த சிறுபான்மையினரும்.

கோத்ரா சம்பவத்தை முன்னிருத்தினால் மக்கள் ஆதரவு குறையுமான்னு கேட்டா கேள்விக்குறியே அதற்கு பதிலாகும்! 1984ல் இந்திராகாந்தி கொலை செய்யப்பட போது டெல்லியில் சீக்கியர்கள் விரட்டி விரட்டி தாக்கப்பட்டார்கள், அப்பாவிகள் பலர் கொல்லப்பட்டனர் காங்கிரஸ் ஆதரவாளர்களே இந்த தாக்குதலை நடத்தினார்கள் என்பது அனைவரும் அறிந்த பட்டவர்த்தமான உண்மை. "ஒரு பெரிய மரம் சாயும் போது பூமி அதிரத்தான் செய்யும்" என்றாராம் ராஜீவ்காந்தி! ஆனால் அப்போதைய தேர்தலில் அதுவரை இல்லாத அளவுக்கு நேரு காலத்தையும்விட அதிகமாக 411 இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. ராஜீவ் பிரதமரானார். எனவே கோத்ரா சம்பவம் மட்டுமே மோடியை நிராகரிக்க போதுமானதாக பேசுவது லாஜிக் இல்லாமல் போகலாம். இங்கதான் இன்னொரு விஷயத்தை கவனிக்கணும் அதுதான் பிராக்டிகல் பாலிடிக்ஸ்.

பிராக்டிகல் பாலிட்டிக்ஸ் தான் எல்லாவற்றையும் ஆட்டிவைக்கிறது! ஹிந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் தமிழகத்தில் புள்ளையார் சிலைய உடைச்சிட்டு முதல்வராக முடியாது! அதுக்குத்தான் திக'விலிருந்து திமுக உருவானது. (பிள்ளையார் சிலையை உடைக்காத திமுக ஆட்சியைப் பிடிக்கும் போது,புள்ளையாரை கும்பிடும் பிஜேபிக்கு இங்கு ஏன் டெபாசிட் கூட கிடைப்பது இல்லை?ன்னு கேக்கலாம். ரொம்ப சிம்பிள் ஏனெனில் பாஜக திராவிட கட்சி கிடையாது :) பாகிஸ்தானில் குரான் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும்! புத்த விகாரத்த நக்கி விடலன்னா சிறிலங்காவுல நகத்த கூட அசைக்க முடியாது. அப்படித்தான் தற்போது இந்தியாவில் உருவெடுத்திருக்கிறார் மோடி! #NaMo4PM இப்படின்னு இணையத்தின் பல இடங்களில் பிரசாரம் நடந்தாலும் இணையத்தில் அதிகமாக உலாவும் மதிமுகவையும் மேடைப் புலிகளையும் இதே இடத்தில் நித்தமும் பார்த்து அவர்களின் அரசியல் ரிசல்ட்டுகளையும் பார்க்கும் நமக்கு இது பெரிய விஷயமல்ல நெட்டு சரக்கா கறிக்கு உதவாதுன்னு சொல்லலாம்!! ஆனா சாமானிய ஆட்டோ ஓட்டுனரும் காய்கறிக் கடைக்காரரும் 'மோடி வந்தா நல்லாயிருக்கும்ய்யா'ன்னு பேசிக்கிறாங்களே அதத்தான் லேசுல எடுத்துக்க முடியல! இந்த தாக்கத்தை நிச்சையமா ஹிந்தி பேசும் வடக்கத்திய ஊடகங்கள் ஏற்படுத்தியிருக்க முடியாது. அப்படியெனில் மதவாதம் தான் இதற்கு அஸ்திவாரமாக அமைந்திருக்கிறது எனில் முக்கால்வாசி இந்துக்கள் நிறைந்திருக்கும் நாட்டில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்!! (அப்படின்னா நீங்க சிறுபான்மையினர கொல்லுவிங்கலான்னு கேக்காதிங்க ஐயம் பாவம்) குஜராத்திகளும் இதைத்தானே விரும்பியிருக்கிறார்கள் தொடர்ந்து தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்!! இதை இந்தியா நிச்சையம் செய்யவே செய்யாதுன்னு என்ன நிச்சையம்???

அரசியல் நிலைபாட்டை பொருத்தமட்டில் மோடியின் தேசிய அரசியல் வருகை பாஜகவிற்கு உள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மோடி முதன் முதலாக முதல்வர் பதவிக்கு வந்தபோது 'இவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பில் செயல்படும் அனுபவமில்லை இவரை துணை முதல்வராக்கலாம் என்றாராம் வாஜ்பாய் ஆனால் இவரை முதல்வராக்க பரிந்துரைத்தவர் அத்வானி' அன்னைக்கு அத்வானி இல்லன்னா இன்னைக்கு மோடி இல்லன்னும் சொல்லலாம் அப்படியிருக்கு தேசிய அரசியலில் அதிகரிக்கும் மோடியின் ஆதிக்கத்தை விரும்பாத அத்வானி பாஜகவிலிருந்தே ராஜினாமா செய்தார்! 17 வருட கூட்டணியை முறித்துக் கொள்வதாக மிரட்டுகிறது ஐக்கிய ஜனதாதளம்.. இதுக்கெல்லாம் பயப்பட வேண்டாம் என்பது போல சமீபத்திய இடைதேர்தலில் மோடியை அமோக வெற்றி பெறச் செய்தார்கள் குஜராஜ்த்திகள். நிதிஷ்குமாரோ அவரது சொந்த மாநிலத்தில் படுதோல்வியடைந்தார். தற்போது நீங்க என்னடா கூட்டணியில இருந்து விலகுறது நாங்க விலகுறோம் என்பதுபோல பிஹார் எம்.எல்.ஏக்கள் ஆதரவை வாபஸ் பெற்று நிதீஷ் அரசை தத்தளிக்கச் செய்யப் போவதாக கேள்வி! பாஜகவை பொருத்தமட்டில் இது கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய நேரம்.

மோடியை கண்மூடித்தனமாக ஆதரிப்பதும் குருட்டான் போக்குல எதிர்ப்பதும் மகா அபத்தம்! சாமானியனின் எண்ணத்தை டிரான்ஸ்பரன்ட்டாக காட்டினால் அது மோடிக்கு ஆதரவாகவே இருப்பது மோடிமஸ்தானம் .


No comments:

UA-42819084-1