1 Aug 2013

நான் போகிறேன் மேலே.. மேலே..


ஒரு சின்ன மேலெழும்புதல் தரையிலிருக்கும் பாறை முகடுகள் தெளிவாக தெரியவே கணிசமான வேகத்தில் அந்த மலையைக் கடந்து சர்ருன்னு கீழ் நோக்கி பறப்பேன்.. இது பறத்தலா அல்லது ஒருவகையான சுலோவான வீழ்ச்சியானு தெரியாது ஆனா காத்துலையே இருப்பேன்.. ..(இதுதான் சைகாலஜி) தாழ்வாரத்தின் மிக அருகில் சென்று பச்சையான அடர் மரங்களின் மேற்பரப்பு அழகை கழுகுப்பார்வையில் ரசித்தவாறே... .. சர்ர்னுன்னு பறப்பேன்!

முழிச்சிப் பாத்தா விடிஞ்சிருக்கும்!

உங்களுக்கும் இப்படி வானத்தில் பறப்பதைப் போல கனவுகள் வந்திருக்கா..?. உலகில் அதிகம் பேருக்கு பொதுவாக வரும் கனவு வகை தான் இது! ரொம்ப ஈசியா அர்த்தம் காணக்கூடிய கனவும் நிறைய பேருக்கு ரொம்ப புடிச்ச கனவும் கூட! இதில் கிரேஸியான சில வகைகள் உண்டு கனவின் துவக்கமே
கழுகுப்பார்வையில் துவங்கும், இல்லன்னா பழைய சைனீஸ் படங்களில் வருவதைப்போல கால்களை உந்தி உயர எம்புவது இந்த எம்புதலின் தொடர்ச்சியா பறப்பது, வீட்டு கூரைகளிலிருந்து இன்னொரு வீட்டு கூரைக்கு தாவுவது, சர்ருன்னு தாழ்வாரத்தை நோக்கி விழுவது, சிக்கலான சூழலில் பறப்பது (பறத்தலில் தடைகள் ஏற்படுவது) இப்படி இதில் பரவலா பல வகைகள் இருக்கு. நம்முடைய மூளை கனவுகளுக்கு என பிரத்தியேகமாக எதையும் உருவாக்குவதில்லை. ஏற்கனவே நாம் பார்த்த நம்ம ஆழ்மனதில் பதிந்த விஷயங்களை மூளை தனக்கு ஏற்றார்போல (இந்த ஏற்றார்போல என்பதுதான் சைகாலஜி) வடிவமைத்து விஷுவலாக காட்டுவதே கனவு!




உலவியல்படியும் நம்பிக்கைகளின் ரீதியிலும் பறக்கும்படியான கனவுகள் பெரும்பாலும் சுதந்திர உணர்வையே முன்மொழிகிறது!! இதுவொரு ஆசையின் வெளிப்பாடு. ஏதோவொரு விஷயத்தில் மனஅழுத்தத்தில் (கடன், அவச்சொல், சிறை இப்படி எதுவேணா) இருந்து விடுபட்ட சுதந்திர உணர்வால் இத்தகைய கனவுகள் தோன்றுகின்ற!. இதுல சுவாரசியம் என்னன்னா அதே விஷயங்களில் நாம விடுபடாம இருந்தாலும் அவைகளிலிருந்து சுதந்திரம் பெற ஆசைப்படுவதாலும் இந்த பறக்கும் கனவுகள் வரலாம்!! வைஸ்வர்சா. மொத்தத்தில் மனம்  'அப்பாடா முடிஞ்சது'ன்னு  நினைப்பதால் ஆழ்மனதில் ஏற்படும் சந்தோசம் இரவில் பறப்பதைப் போன்ற கனவாக வெளிப்படுத்துகிறது! அது ஏன் வானத்தில் பறப்பதைப் போல வரணும்?? மனிதன் பிறந்ததிலிருந்தே பறவைகளைப் பார்கிறான் அவைகளைப்போல பறக்கணும்னு ஆசைப்படுகிறான். பறப்பதினாலே பறவைகள் சுதந்திரமா இருக்குன்னு நம்புறான் எனவே தானும் சுதந்திரமா இருக்க பறக்கணும்னு ஆசப்படுறான்! டிவியில் புத்தகங்களில் மனிதர் பறக்கும் காட்சிகள் பறப்பதைப் போன்ற கற்பனைகள் இந்த விஷயத்த இன்னும் தூண்டிவிடுது! எனவே கனவுல நாம ஜாலியா பறக்குறோம்.

ஆழ்மனத்தின் செக்ஸுவல் உணர்வுதான் பறப்பதைப் போன்ற கனவும்னும் சொல்றாங்க! ஏன்னா நம்ம ஆழ்மனம் அவ்ளோ சந்தோசமா இருக்குமாம்!! அதிக செக்ஸ் ஆர்வமுடையவர்களுக்கு இத்தகைய பறக்கும் கனவுகள் அடிக்கடி வரலாம். இதை இன்னொரு விஷயத்துடன் ஒப்பிட்டு பாக்கனும்னா யோகா. சிறந்த யோகா பயிற்சி நாம பறப்பதைப் போல உணரச் செய்யும். மொத்தத்தில் இந்த பறக்கும் கனவுகள் ஆழ்மனத்தின் சந்தோஷ வெளிப்பாடுகளே.

இந்த கனவுகள் பெரும்பாலும் பெண்கள விட ஆண்களுக்கே அதிகம் வருதாம்!!! அவங்களுக்குத் ஆயிரத்தெட்டு பிரச்சனைகள்ன்னு ஒரு சிம்பாலிக் -இந்த சிம்பாலிக்கிற்குள் ஆண் பெண்களின் பிரச்னையை அணுகும் சைகாலஜி பத்தி பெரிய பட்டியலே இருக்கு உதாரணம் யாரேனும் பரிவா பேசி அன்பா ஆறுதலா பேசினா எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் பெண்கள் சட்டுன்னு மறந்துடுவாங்க! ஆனா ஆண்கள் அப்படியில்ல!! எனவே ஆண்களுக்கு அதிக பிரச்சனைகள் பிரச்சனைகளில் இருந்து விடுபடும்போது விடுபட விரும்பும்போது இந்த கனவுகள் தோன்றுவதாக கணிப்பு.


கனவுனாலே ஆயிரம் நம்பிக்கைகள் ஆயிரம் சுவாரசியங்கள் மேலும்
கண்டிப்பா இதுல மெசேஜ் இருக்கும்னு நம்புறவங்களும் அதிகம். சரி இந்த பறக்கும் கனவுகள் சொல்லும் மெசேஜ்கள் என்ன..?.

பொதுவா ஜாலியா பறக்குறது சந்தோசத்தை குறிக்கிறது, கொஞ்சம் தரை தாழ்வாரத்தில் தரையை தொடாமல் பறப்பது ஏதோவொரு முக்கியமான விஷயத்தில் முடிவெடுக்க தடுமாறுகிறீர்கள் என்று பொருள், சைனீஸ் படங்களைப் போல உயர எம்பி பெருசா குதிச்சி தத்தித்தத்தி பறப்பது நீங்க விரும்பாத ஏதோவொரு விஷயம் உங்களுக்கு அடிக்கடி நடக்குதுன்னு அர்த்தம், நீங்க பறக்கும்போது தடைகள் வந்தா ம்ம்ம்.. உதாரணத்துக்கு கட்டிடங்களுக்கு நடுவே பறப்பது போன்று இருந்தா குறிப்பிட்ட விஷயத்தில் நீங்க நிறைய தடைகளை சந்திக்கிறீர்கள்ன்னு அர்த்தம் அந்த தடைகளை பார்த்து பயந்தா நிகழ்காலத்தில் ஏற்படும் குறிப்பிட்ட தடைகளை கண்டு அஞ்சுகிறீர்கள் என்று பொருள், நீங்க பறக்கும் சூழல் ரொம்ப கடினமானதா இருந்தா (புயல், மழை போன்ற சூழலில் பறப்பது) இப்போ உங்களுக்கு நிறைய மனஉளைச்சல் இருக்கு இருந்தாலும் நீங்க சந்தோசமா இருக்க ஆசப்படுறிங்கன்னு அர்த்தம்,ரொம்ப உயரமா பறக்க பயந்திங்கன்னா ஆளுமைத்திறன் குறைவா இருக்குன்னு அர்த்தம், விமானத்தில் பறக்கும்போது கீழே பூமியைப் பார்த்து ரசிப்பதைப் போல தோன்றினால் உங்கள் நிகழ்கால சூழலில் ஒரு துணை இருந்தா நல்லாயிருக்கும்ன்னு நினைக்கிறிங்கன்னு அர்த்தம் (இது விமானத்தில் பறக்கணும்ன்ற ஆசையின் வெளிப்பாடா கூட இருக்கலாம்), பறக்கும் போது எவ்வளவு லாவகமாக பறக்கிறீர்களே நிகழ்காலத்தில் அவ்வளவு லாவகமாக உங்களுடைய சூழலை அணுகும் முறை இருக்கும்.

பழங்கால கிரேக்க நம்பிக்கையின்படி இப்படி கனவில் பறப்பது ஓவர் கான்பிடன்சை சொல்லுவதா நம்பிக்கை. (இகார்ஸின் கிரேக்க கதைப்படி) இப்படி கனவில் பறப்பது அழிவுக்கு அறிகுறின்னும் சொல்றாங்க. இஸ்லாமிய நம்பிக்கையில் இப்படி பறக்கும் கனவுகளின் வகைகளுக்கு ஏற்ப பல பல அர்த்தங்கள் சொல்றாங்க அதில் குறிப்பட்டது ரொம்பவே உடல்நிலை
சரியில்லாதவர்கள் இப்படி கனவு கண்டால் விரைவில் அவர்கள் மரணமடையலாம் என்றொரு நம்பிக்கை. இவை மூடநம்பிக்கைகளாகவும் இருக்கலாம். இதுதான் சரியான விளக்கம்னும் சொல்லமுடியாது. ஒவ்வொரு இடத்தில் ஒவ்வொரு மாதிரியான விளக்கங்கள் உலாவுகின்றன ஷாத் ஷாத் கனவுகளைப் போலவே.


-கனவு காணுங்கள்.





No comments:

UA-42819084-1