1 Aug 2013

நான் போகிறேன் மேலே.. மேலே..


ஒரு சின்ன மேலெழும்புதல் தரையிலிருக்கும் பாறை முகடுகள் தெளிவாக தெரியவே கணிசமான வேகத்தில் அந்த மலையைக் கடந்து சர்ருன்னு கீழ் நோக்கி பறப்பேன்.. இது பறத்தலா அல்லது ஒருவகையான சுலோவான வீழ்ச்சியானு தெரியாது ஆனா காத்துலையே இருப்பேன்.. ..(இதுதான் சைகாலஜி) தாழ்வாரத்தின் மிக அருகில் சென்று பச்சையான அடர் மரங்களின் மேற்பரப்பு அழகை கழுகுப்பார்வையில் ரசித்தவாறே... .. சர்ர்னுன்னு பறப்பேன்!

முழிச்சிப் பாத்தா விடிஞ்சிருக்கும்!

உங்களுக்கும் இப்படி வானத்தில் பறப்பதைப் போல கனவுகள் வந்திருக்கா..?. உலகில் அதிகம் பேருக்கு பொதுவாக வரும் கனவு வகை தான் இது! ரொம்ப ஈசியா அர்த்தம் காணக்கூடிய கனவும் நிறைய பேருக்கு ரொம்ப புடிச்ச கனவும் கூட! இதில் கிரேஸியான சில வகைகள் உண்டு கனவின் துவக்கமே

29 Jul 2013

ஹிட்லர் ஏன் யூதர்களை விரட்டி விரட்டி கொன்றார்!

முதல் உலகப்போரில் தம்மைத் துரத்தியடித்த சோவியத்தை (ரஷியா) ஆதரிக்கும் இங்கிலாந்துக்கு ஒருபோதும் துணைபோக மாட்டோம். அகதிகளாகிய எம்மை ஆதரித்து இடம் கொடுத்த ஜெர்மனியின் அணியிலிருந்து இங்கிலாந்தை எதிர்ப்பது என்ற நிலைபாட்டில் யூதர்கள் இருந்தனர் ஆரம்பத்தில் அவ்வாறே செயல்பட்டனர்! ஆனால் யூத நிதிநிறுவனங்களோ செல்வந்தர்களோ ஜெர்மனியின் போர் செலவிற்கு அஞ்சு பைசாவும் தருவதில்லை என்ற தீர்க்கத்தில் இருந்தனர் இதன் பின்னணியில்தான் சூட்சுமம் இருந்தது!! யூதர்களின் இந்த ஆதிக்கப் பிரிவினர் போரின் போக்கைக் கண்டு பாலஸ்தீனத்தை தமக்கு தருவதாக இருந்தால் அமெரிக்காவை போரில் இணைப்பது, தமக்கு அடைக்கலம் கொடுத்தவராக இருந்தாலும்

27 Jul 2013

லப்பர் வைத்து அழித்திடும் அளவிற்கு இந்து மதம் அவ்வளவு லேசில்லை! நானும் இந்து வெறியனில்லை!!

டாஸ்மாக் சரக்கில் கரப்பான்பூச்சி, கரண்ட் ஷாக் அடிச்சி பெண் பலியானதில் மக்கள் ஆச்சரியம்.. . மூன்றாவது உலகப்போரில் இந்தியா வெற்றி நாராயணசாமி தகவல்.. என்பது போல இதுவும் ஒரு தகவல் செய்தி அவ்வளவே. ஒரு பேஸ்புக் கமெண்ட் இழையில் தோழர் ஒருவர் "இந்து மதம் அவ்வளவு பழையதா?? எங்கே ஆதாரம் காட்டுங்கள்" என்று வேறொருவரைக் கேட்க அதற்கான பதிலாக புரவுசரின் ஊடாகவே பல ஆயிரம் வருடங்களை அரைமணிநேரத்தில் கடந்துலாவி தேடிய பதில்கள் கீழே (சிற்றறிவு சிலாகித்தாலும் ஆதாரம் கேக்குதே அடுத்தவர் மூளை) :


இந்து மதம் இந்தியா முழுக்க பரந்துபட்டது எனினும் நாம நம்ம எல்லைகளான தமிழகத்திற்கு உள்ளே மட்டும் பார்த்தல் நமக்குத் தெரிஞ்சி (எனக்குத் தெரிந்து) சங்க இலக்கியங்கள் தாம் எழுதி வைக்கப்பட்ட டாக்குமெட் ஆதாரங்கள்

14 Jun 2013

இந்துஸ்தானம் ஆகுமா மோடிமஸ்தானம்?

இந்திய ஊடகங்களின் 'அமோசன் காடுகளில் உள்ள அரியவகை மூலிகையாக' சித்தரிக்கப்பட்டு வருகிறார் மோடி!! அப்படி என்னதான் இருக்கிறது மோடியிடம்!? எல்லாரும் சொல்வதைப்போல மோடி குஜராத்தை வளர்த்து இந்தியாவின் மாதிரி மாநிலமாக உருவாக்கியிருக்கிறார் என்பது உண்மைதான் அதில் மாற்றுக்கருத்தில்லை அனால் இந்தியாவில் குஜராத் மட்டுமே வளரவில்லை மற்ற மாநிலங்களும் (தமிழகம் உட்பட) வளர்ந்திருக்கின்றனவே!! அவற்றில் பாஜக ஆளும் மாநிலங்களும் இருக்க மோடியை மட்டுமே போகஸ் செய்வது ஏன்.?.

26 Apr 2013

இஞ்சித்தின்ன கொரங்கும் இன்ஜினியரிங்கும்!

கடுப்பைக் கிளப்பும் அசைன்மேன்ட்டுகளை பட்டும்படாமலும் தொட்டும்தொடாமலும் எழுதிவிட்டு நள்ளிரவு வரை இணையத்தில் இன்ச் பை இன்சாக நகர்ந்தவாரே லேப்டாபை கட்டிப்பிடித்து தூங்கிப் போக 9 மணி கல்லூரிக்கு என் அறையில் 8.50க்கு சூரியோதயமாகும்..!.?.

அதன் பிறகு இணையக் கடன்களை எல்லாம் முடித்து ( தவறாமல் பேஸ்புக் லாகின் ). குளிக்கச் சென்றால் பச்சைத்தண்ணி என்னைப் பார்த்து பல்லைக் காட்ட.. நான் பக்கெட்டைப் பார்க்க பக்கெட் என்னைப் பார்க்க.. இந்த காதல் கதை ஐந்து நிமிடம் கழித்து ஒரு வாக்கியத்துடன் முடிவுக்கு வரும் 'வாழ்க்கை வாழ்வதற்கே வாழ்ந்து காட்டுவோம்'. ஒருவழியாக நனைந்து ரூமுக்கு வந்தால் கல்லூரியில் மணியடிப்பது எனக்குக் கேட்க்கும் மணி 9.

24 Apr 2013

சரச சிலைகள்

ஊரைச் சுத்தி ஆயிரத்தி முன்னூறு குறைகளிருக்கு அத விட்டுட்டு உப்பு சப்பில்லாம முச்சந்தியில வந்து கலாச்சார சீரழிவுக்கு கோவில் சிற்பங்களில் உள்ள சரசர சிற்பங்களும் ஒரு காரணம்னு சொல்றது படு கண்மூடித்தனம்! மூடநம்பிக்கைகளை எதிர்க்கிறேன் பேர்வழின்னு, இஸ்லாம் சிறந்ததுன்னு சொல்ல ஹிந்துசத்தை உதாரணத்து எடுக்கும் எடுப்பு சோறுகளும் செய்யும் செம காமடி விஷயங்கள் இவை :) எனக்கும் மூடநம்பிக்கைகளில் துளியும் உடன்பாடில்லை கோவில்களின் வழிபாட்டு முறைகளை செருப்பால அடிக்கும் நான் கோவில்களை போற்றுகிறேன்!!

21 Apr 2013

ஐபிஎல்'ஜீ.. அச்சாஜீ..

இந்தியா ஏழைகள் நிறைந்த நாடு, பல உள்நாட்டு கலகங்களையும், சுதந்திரமடைந்து பல ஆண்டுகளைக் கடந்து இன்னும் சிலபல பிரிவினைவாத குரல்களைக் கொண்ட நாடு போன்ற இன்னும் பல விஷயங்களை உடைத்து தவிடுபொடியாக்கி ஒரு கலர்புல்லான மாயையை ஏற்படுத்துது இந்த ஐபிஎல் என்றால் அது மிகையல்ல!! இந்தியாவின் பொருளாதாரம், உள்நாட்டு விவகாரங்கள், தன்னிறைவுகள், நிர்வாகங்கள், நிதி ஒதுக்கீடு, கார்பரேட் அதிகாரங்கள் ஆளுமைகள் போன்ற இன்னும் பல விஷயங்களை எழுதும் வெளிநாட்டு கட்டுரையாளர்கள் இந்தியாவில் ஐபிஎல் சமாச்சாரத்தை ஒரு கேலியான நகைப்புக்குரிய வரியாகவே, எதார்த்தமாகவோ சொன்னால் கட்டுரை இன்னும் சிறப்பாகும் உதாரணத்திற்கு
UA-42819084-1